Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று மே 13….!!

கிரிகோரியன் ஆண்டு :  133 ஆம் நாளாகும்.

நெட்டாண்டு :  134 ஆவது நாள்.

ஆண்டு முடிவிற்கு :  232 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்:

1515 – பிரான்சு அரசி மேரி டூடோர், சபோல்க் பிரபு சார்லசு பிரான்டனை கிரேனிச்சு நகரில் அதிகாரபூர்வமாகத் திருமணம் புரிந்தார்.

1568 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரியின் படைகள் லாங்சைடு என்ற இடத்தில் நடந்த சமரில் அவளது உடன்பிறப்பான யேம்சு ஸ்டுவர்ட்டின் இசுக்கொட்லாந்திய சீர்திருத்தத் திருச்சபைப் படைகளிடம் தோற்றன.

1648 – தில்லியில் செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது.

1765 – யாழ்ப்பாணத்தின் டச்சுத் தளபதியாக அந்தனி மூயார்ட் நியமிக்கப்பட்டார்.[1]

1787 – ஆஸ்திரேலியாவில் குடியேற்றத்தை ஆரம்பிப்பதற்கென 11 கப்பல்களில் 772 சிறைக்கைதிகளையும் குற்றவாளிகளையும் ஏற்றிக் கொண்டு கப்டன் ஆர்தர் பிலிப் இங்கிலாந்து போர்ட்ஸ்மவுத் துறையை விட்டுப் புறப்பட்டார்.

1830 – எக்குவாடோர் கொலம்பியாவிடம் இருந்து விடுதலை அடைந்தது.

1846 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: ஐக்கிய அமெரிக்கா மெக்சிக்கோ மீது போரை அறிவித்தது.

1861 – பெரும் வால்வெள்ளி ஒன்று ஆஸ்திரேலியாவில் வின்சர் நகரில் அவதானிக்கப்பட்டது.

1861 – பாக்கித்தானில் முதலாவது தொடருந்து சேவை கராச்சி முதல் கோத்ரி வரை ஆரம்பிக்கப்பட்டது.

1880 – நியூ செர்சியில் மென்லோ பூங்காவில் தாமசு ஆல்வா எடிசன் மின்சாரத்தில் இயங்கும் தனது முதலாவது தொடருந்தை சோதித்தார்.

1888 – பிரேசில் பேரரசு அடிமைமுறையை இல்லாதொழித்தது.

1939 – முதலாவது எஃப்எம் வானொலி நிலையம் ஐக்கிய அமெரிக்காவில்  கனெடிகட் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

 

1940 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் இராணுவம் மியூசே ஆற்றைத் தாண்டி பிரான்சினுள் புகுந்தது. முற்றுகை ஆரம்பமானது.

1940 – இரண்டாம் உலகப் போர்: நெதர்லாந்தினுள் நாட்சி ஜெர்மனியர் புகுந்ததை அடுத்து அதன் அரசி வில்லெல்மினா பிரித்தானியாவுக்கும் இளவரசி ஜூலியானா தனது குழந்தைகளுடன் கனடாவுக்கும் தப்பி ஓடினர்.

1943 – இரண்டாம் உலகப் போர்: வட ஆப்பிரிக்காவில் செருமனிய,  இத்தாலியப் படையினர் கூட்டுப் படைகளிடம் சரணடைந்தனர்.

1952 – இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையின் முதலாவது அமர்வு இடம்பெற்றது.

1954 – சிங்கப்பூரில் தேசியத்துக்கு எதிராக சீனப் பாடசாலை மாணவர்களின் போராட்டம் இடம்பெற்றது.

1958 – அல்ஜியர்சில் பிரெஞ்சு இராணுவ அதிகாரிகள் சிலர் இராணுவப் புரட்சியில் ஈடுபட்டனர்.

1960 – உலகின் ஏழாவது உயர மலையான தவுளகிரியின் உச்சியை  சுவிட்சர்லாந்து மலையேறிகள் இருவர் முதன் முதலில் அடைந்தனர்.

1967 – சாகிர் உசேன் இந்தியாவின் முதலாவது முஸ்லிம் குடியரசுத் தலைவர் ஆனார்.

1969 – மலேசியாவில் கோலாலம்பூரில் சீன மலேசியர்களுக்கும் மலே இனத்தவர்களுக்கும் இடையில் இனக்கலவரம் மூண்டது. 190 பேர் கொல்லப்பட்டனர்.

1971 – வங்காளதேசம், தெம்ரா நகரில் 900 இற்கும் அதிகமான வங்காள இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1972 – சப்பான், ஒசாக்காவில் பல்பொருள் அங்காடி ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் சிக்கி 118 பேர் உயிரிழந்தனர்.

 

1981 – ரோம் நகரில் புனித பேதுரு சதுக்கத்தில் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் திருத்தந்தை காயமடைந்தார்.

1985 – பிலடெல்பியாவில் மூவ் என அவைக்கப்படும் கறுப்பின விடுதலைக் குழு ஒன்றின் தலைமையகம் மீது காவல்துறையினர் குண்டு வைத்துத் தகர்த்ததில், ஐந்து சிறுவரக்ள் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர்.

1989 – சீனாவில் தியனன்மென் சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் உண்ணாநோன்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

1996 – வங்காள தேசத்தில் வீசிய கடும் புயலில் சிக்கி 600 பேர் வரையில் இறந்தனர்.

1997 – இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது.

1998 – இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் சீனர்களுக்கெதிராக இனக்கலவரம் ஆரம்பமானது.

1998 – இந்தியா மே 11 இற்குப் பின்னர் மேலும் இரண்டு அணுகுண்டுச் சோதனைகளை மேற்கொண்டது. இந்தியா மீது ஐக்கிய அமெரிக்கா, மற்றும் சப்பான் பொருளாதாரத் தடையைக் கொணர்ந்தன.

2005 – உஸ்பெக்கிஸ்தானில் அண்டிஜான் என்ற இடத்தில் காவற்துறையினர் போராட்டக் காரர் மீது சுட்டதில் 187 பேர் கொல்லப்பட்டனர்.

2006 – அல்லைப்பிட்டிப் படுகொலைகள்: யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் 13 பொதுமக்களை இலங்கைக் கடற்படையினர் படுகொலை செய்தனர்.

2006 – திமுக தலைவர் மு. கருணாநிதி 5வது முறையாக தமிழக முதல்வர் பதவியை ஏற்றார்.

2007 – திருகோணமலை மொறவேவாப் பகுதியில் பொங்குதமிழ் உட்படப் பலநிகழ்வுகளில் முன்னின்று கலந்துகொண்ட வணக்கத்துக்குரிய நந்தரத்ன தேரோ இனம் தெரியாதோரால் படுகொலை செய்யப்பட்டார்.

2011 – பாக்கித்தானில் சார்சாதா மாவட்டத்தில் இரண்டு குண்டுகள் வெடித்ததில், 98 பேர் கொல்லப்பட்டனர், 140 பேர் காயமடைந்தனர்.

2014 – துருக்கியில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பில் 301 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

2018 – இந்தோனேசியாம் சுராபாயாவில் மூன்று கிறித்தவத் தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்:

1221 – அலெக்சாந்தர் நெவ்ஸ்கி, உருசிய இளவரசர், புனிதர் (இ. 1263)

1754 – யாக்கூப் ஆஃப்னர், செருமானிய-டச்சு பயண எழுத்தாளர் (இ. 1809)

1792 – ஒன்பதாம் பயஸ் (திருத்தந்தை) (இ. 1878)

1841 – இராபர்ட் இசுடேன்சு, பிரித்தானியத் தொழிலதிபர், வள்ளல் (இ. 1936)

1857 – ரொனால்டு ராஸ், நோபல் பரிசு பெற்ற இந்திய-ஆங்கிலேய மருத்துவர் (இ. 1932)

1882 – ஜோர்ஜெஸ் பிராக், பிரான்சிய ஓவியர் (இ. 1963)

1883 – ஜியார்ஜியோ பாபனிகொலாவு, பாப் சோதனையைக் கண்டுபிடித்த கிரேக்க-அமெரிக்க மருத்துவர் நோயியலாளர் (இ. 1962)

1905 – பக்ருதின் அலி அகமது, இந்தியாவின் 5வது குடியரசுத் தலைவர் (இ. 1977)

1914 – அந்தோனியா பெரின் மொரீராசு, எசுப்பானியக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 2009)

1916 – சச்சிதானந்த ராவுத்ராய், இந்திய ஒரிய மொழிக் கவிஞர் (இ. 2004)

1918 – தஞ்சாவூர் பாலசரஸ்வதி, இந்திய நடனக் கலைஞர் (இ. 1984)

1920 – கு. மா. பாலசுப்பிரமணியம், தமிழகத் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் (இ. 1994)

1948 – ஜஸ்ரின் ஞானப்பிரகாசம், இலங்கை உரோமன் கத்தோலிக்க யாழ்ப்பாண ஆயர்

1956 – ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், இந்திய மதகுரு

1968 – இசுக்காட் மொரிசன், ஆத்திரேலியாவின் 30-வது பிரதமர்

1981 – சன்னி லியோனே, கனடிய அமெரிக்க நடிகர்

1984 – பென்னி தயாள், இந்தியப் பாடகர்

1986 – ராபர்ட் பாட்டின்சன், ஆங்கிலேய நடிகர்

1987 – காண்டைஸ் அக்கோலா, அமெரிக்க நடிகை

1993 – ரொமேலு லுக்காக்கு, பெல்ஜிய காற்பந்து வீரர்

 

இறப்புகள்:

1835 – ஜான் நாசு, ஆங்கிலேயக் கட்டிடக் கலைஞர் (பி. 1752)

1878 – ஜோசப் ஹென்றி, அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1797)

1898 – பி. ஆர். ராஜமய்யர், தமிழக எழுத்தாளர் (பி. 1872)

1930 – பிரிட்ஜோப் நான்ஸன், நோபல் பரிசு பெற்ற நோர்வே அறிவியலாலர் (பி. 1861)

1961 – கேரி கூப்பர், அமெரிக்க நடிகர் (பி. 1901)

1978 – வி. தெட்சணாமூர்த்தி, ஈழத்துத் தவில் கலைஞர் (பி. 1933)

2000 – தாராபாரதி, தமிழகக் கவிஞர் (பி.1947)

2001 – ஆர். கே. நாராயண், இந்தியப் புதின எழுத்தாளர் (பி. 1906)

2005 – ஜார்ஜ் டாண்ட்சிக், அமெரிக்கக் கணிதவியலாளர் (பி. 1914)

 

Categories

Tech |