12-05-2020, சித்திரை 29, செவ்வாய்க்கிழமை.
இராகு காலம் மதியம் 03.00-04.30
எம கண்டம் காலை 09.00-10.30
குளிகன் மதியம் 12.00-1.30
இன்றைய ராசிப்பலன் – 12.05.2020
மேஷம்
இன்று உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். சிக்கனமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டு. தொழில் தொடர்பாக எடுக்கும் புதிய முயற்சிகளில் சில தடங்கல்கள் ஏற்படலாம்.
ரிஷபம்
குடும்பத்தில் இன்று தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று குழப்பத்துடன் காணப்படுவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. ஓரளவு மன அமைதி இருக்கும்.
மிதுனம்
உங்கள் உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைப்பதில் கால தாமதம் உண்டாகலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் ஒருசில பாதிப்புகள் ஏற்படும். தொலைதூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை.
கடகம்
குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். மன அமைதி உண்டாகும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கிக் கொடுப்பீர்கள். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சுப காரியங்கள் கை கூடும். நண்பர்களால் அனுகூலம் உண்டு.
சிம்மம்
குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் இருக்கும். பிள்ளைகளால் சுபச் செலவுகள் உண்டாகும். வியாபாரத்தில் உள்ள சிக்கல்கள் தீரும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நீண்டநாள் எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும். பெண்கள் புதிய பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.
கன்னி
பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். உத்யோகத்தில் உங்களது மதிப்பும் மரியாதையும் உயரும். உறவினர்கள் உதவியால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.
துலாம்
இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சுமாராக தான் இருக்கும். பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.தொழிலில் பணியாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
விருச்சிகம்
பிள்ளைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் நிம்மதி குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனை கொடுக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.
தனுசு
இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் பண வரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய முறையைக் கையாண்டு நற்பலனை அடைவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.
மகரம்
குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை பிள்ளைகளால் அலைச்சல் உண்டாகலாம். பணவரவு சுமாராக இருக்கும். தெய்வ வழிபாடு நல்லது. உங்கள் பிரச்சனைகள் தீர உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். அனுபவம் உள்ளவர்களின் அறிவுரைகள் தொழிலில் நற்பலனை கொடுக்கும்.
கும்பம்
இன்று இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் இருந்து எதிர்ப்புகள் விலகி நிம்மதி கூடும். கடன்கள் குறையும். வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது.
மீனம்
இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து முடிப்பீர்கள். வெற்றி கிட்டும் நாள். உழைப்புக்கேற்ற ஊதியம் உயர்வு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். விட்டுக்கொடுத்துச் செல்வதால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.