செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 91 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த இரண்டு நாட்களில் தோராயமாக 83 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. அதில் பெரும்பாலானோர் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்தவர்கள். அந்த வகையில் இன்று ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது . இதில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்தவர்கள்.
அதேபோல காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்த அனைவரையும் கண்டறிந்து, அவர்களின் தொடர்பில் இருப்பவர்களின் இரத்த மாதிரி எடுக்கப்பட்டு, தொடர்ச்சியாக ரத்த பரிசோதனை நடைபெற்று வருகின்றது.