கன்னி ராசி அன்பர்களே …! இன்று பயணங்கள் இனிமையாக அமைப்பதற்கு கொஞ்சம் முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். புதிய நபரிடம் உரையாடும் பொழுது ரொம்ப கவனம் வேண்டும். வாகன வசதிகள் பெருகும். குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். தனலாபம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபமும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மற்றவர்களுக்காக பொறுப்புகளை தயவுசெய்து ஏற்க வேண்டாம்.
உணவு விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கட்டுப்பாடுதேவை. நேரம் தவறாமல் உண்பதும் உறங்குவதும் ரொம்ப நல்லது. ஆரோக்கியம் பாதுகாப்பாக இருக்கும். முக்கிய நபர்களின் உதவிகள் கிடைக்கும். தன்னம்பிக்கை கூடும். விடாமுயற்சியுடன் ஈடுபட்டு காரிய வெற்றியும் ஏற்படும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். இன்று அடுத்தவரை அதிகாரம் செய்யும் பொழுது கவனம் இருக்கட்டும். யாருக்காகவும் எந்த விதத்திலும் ஜாமீன்கையெழுத்து போட வேண்டாம்.
காதலர்களுக்கு இன்று இனிமையான நாளாக இருக்கும். வசீகரமான பேச்சால் காதலில் வயப்படக்கூடிய சூழலில் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்.