விழுப்புரம் சிறுமி கொலை வழக்கில் தொடர்புடைய அதிமுக பிரமுகர்களான கலியபெருமாள், முருகன் ஆகிய இருவர் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை அடுத்த சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி முன் விரோதம் காரணமாக கொலை செய்யட்டுள்ளார். வீட்டில் தீக்காயங்களுடன் எரிந்து கொண்டிருந்த மாணவி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 80 சதவீதம் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்தார். அவரிடம் விழுப்புரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதி அருண்குமார் வாக்குமூலம் பெற்றார்.
அந்த வாக்குமூலத்தில் முருகன் மற்றும் கலிய பெருமாளுக்கு வீட்டிற்கு வந்தார்கள். என் வாயில் துணியை வைத்து பிறகு தலையில் மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோலை ஊற்றினார்கள். வாயில் துணி இருந்ததால் தொடர்ந்து பேச முடியவில்லை. என் மீது தீவைத்து விட்டு கதவை தாளிட்டு சென்று விட்டார்கள் என்று முருகன், கலியபெருமாள் தான் காரணம் என்று மாணவி ஜெயஸ்ரீ தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற சிகிச்சையில் மாணவி ஜெயஸ்ரீ சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் விழுப்புரம் சிறுமி கொலை வழக்கில் தொடர்புடைய அதிமுக பிரமுகர்களான கலியபெருமாள், முருகன் ஆகிய இருவர் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து விழுப்புரம் சிறுமி கொலை விவகாரம் குறித்து முதல்வர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். கொலைச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார். மேலும் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.