விருச்சிக ராசி அன்பர்களே…! இன்று மனைவியின் ஒத்துழைப்பு மன மகிழ்ச்சியை கொடுக்கும். புதிய நபர்களை சந்திக்கும் பொழுது மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாக செயல்பட வேண்டியிருக்கும். பயணங்கள் ஓரளவு இனிமை தந்தாலும் பொருட்கள் மீது கவனம் இருக்கட்டும். வாகன யோகமும், நல்ல வருமானம் ஆகியவை ஏற்படும். நெருங்கிய உறவினர்களுக்கு உதவிகளைச் செய்வீர்கள். வரன் தேடும் முயற்சிகள் சாதகமாக முடியும்.
நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். மரியாதை, அந்தஸ்து ஆகியவை உயரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். இன்றைய நாள் வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அதேபோல மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுது மட்டும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். தேவையில்லாத விஷயங்களில் எப்பொழுதும் நீங்கள் தலையிட வேண்டாம்.
கூடுமானவரை பஞ்சாயத்துக்கள் ஏதும் செய்ய வேண்டாம். காதலர்கள் இன்று பொறுமை காக்க வேண்டும். இனிமையாக பேசுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். வாக்குவாதம் தயவு செய்து விட்டுவிடுங்கள். இன்று முக்கிய ஒரு பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் செய்யும் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிசய எண் :7 மற்றும் 8
அதிஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.