மீன ராசி அன்பர்களே…! இன்று குழந்தைகளால் சந்தோஷம் நிலவும். அழகிய மனைவி அமைய கூடும். தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள் வெற்றிக்கு வழி அமைத்துக் கொள்விர்கள். சில நேரங்களில் ஏமாற்றங்களும் வரக்கூடும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும்.
கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் கூடும். பயணங்களின் போது மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருங்கள். உங்களுடைய திறமை வெளிப்படும் காரியங்கள் அனுகூலமாகும். மனதில் தைரியம் உண்டாகும் எதையும் இன்று திறம்பட செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். இன்று காதலர்கள் பொறுமை காக்க வேண்டும். நிதானமாக தான் பேச வேண்டும். அதே போல எந்த ஒரு பிரச்சனையும் தயவுசெய்து சிக்கிக் கொள்ளாமல் இருங்கள்.
கூடுமானவரை உங்களுடைய ரகசியங்களை நீங்கள் பாதுகாக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் இளம்பச்சை நிறம்.