Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

விடுபட்ட +2 தேர்வு ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் –  தமிழக அரசு

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலகத்தில் செய்தியாளரை சந்தித்தார். அப்போது அவர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் நடந்து கொண்டிருந்த ஒத்திவைக்கப்பட்ட பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வு தேதியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

அதே போல கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட போக்குவரத்து சிக்கல் உள்பட பல காரணங்களால் 12ஆம் வகுப்பு இறுதி பொதுத்தேர்வை  எழுதாத 36 ஆயிரத்து 842  மாணவர்களுக்கு ஜூன் 4ஆம் தேதி தேர்வு நடைபெறுமென்று அமைச்சர் தெரிவித்தார்.

Categories

Tech |