Categories
பெரம்பலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பெரம்பலூரில் 14 கர்ப்பிணிகள் உட்பட 25 பேருக்கு இன்று கொரோனா உறுதி..!

பெரம்பலூரில் இன்று ஒரே நாளில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பெரம்பலூர் மாவட்டத்தில் பாதிப்புகளின் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 14 கர்ப்பிணி பெண்கள் உட்பட 25 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று வரை பெரம்பலூர் மாவட்டத்தில் 105 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதில் 7 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் நேற்று வரை 8,002 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 53 பேர் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும், இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று 5,895 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இன்று மேலும் 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூரில் கொரோனா உறுதியான பலர் கோயம்பேடு சந்தை சென்று திரும்பியவர்கள் ஆவர்.

Categories

Tech |