Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#Breaking: சென்னையில் கூடுதல் ஆணையருக்கு கொரோனா ….!!

சென்னையில் இன்று ஒரே நாளில் காவல்துறை உயரதிகாரிகள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நினைத்துகூட பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முன் களப் பணியாளராக செயல்படும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறை என பலரும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தங்களின் உயிரை பணையம் வைத்து அவர்கள் பணியாற்றிய சென்னை காவலர்கள் 100 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது., மேலும் சென்னையில் மட்டும் 2 துணை ஆணையர்கள், ஒரு உதவி ஆணையர் உட்பட 100 பேர் பாதிக்கப்பட்ட நிலையில்  சென்னையில் கூடுதல் ஆணையருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இன்று ஒரே நாளில் மட்டும் காவல்துறையின் 3 உயரதிகாரிகளுக்கு கொரோனா உறுதி செயப்பட்டுள்ளது.

Categories

Tech |