Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசாங்கம் செயல்படவே இல்லை…! ”நானே களமிறங்குவேன்” அதிரடி காட்டிய ஸ்டாலின் …!!

திமுக தலைவர் முக.ஸ்டாலின் மக்களிடம் இருந்து வந்த கோரிக்கை மனுக்களை முதல்வருக்கு அனுப்ப போறேன் என்று தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று ட்விட்டர் மூலம் பேசியதில், மிகுந்த நெருக்கடியான நேரத்தில், எங்களால் முடிந்த உதவிகளை இந்த 20 நாட்களாக செஞ்சுட்டு வந்தோம். நமக்கு வருகின்ற கோரிக்கையை வைத்துப் பார்க்கும்போது அரசாங்கம் செயல்படவே இல்லை என்று தெரிகின்றது. அரசாங்கமும், அரசு பதவியில் உள்ளவர்களும் மக்களுக்கான கடமையை செய்யும் பொறுப்பில் இருந்து தவறக் கூடாது. நான் முன்பே சொன்ன மாதிரி நாம அரசாங்கம் கிடையாது. பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளை முடிந்தவரை நாங்க செஞ்சிருக்கோம்.

எப்படிப்பட்ட உதவிகளை, எந்த மாதிரியான திட்டமிடுதலுளோடு அரசாங்கம் செய்யணுனு நாங்க காட்டியிருக்கும். இதன் தொடர்ச்சியாக எங்களிடம் வரும் கோரிக்கைகளை இணையத்தின் மூலமாக அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு போய் சேர்க்கப்போறோம். அதாவது மக்களின் கோரிக்கைக்கு செவி மடுக்க அரசாங்கத்தை செயல்பட வைக்க போகிறோம்.

நானே முதலமைச்சர்கள் அலுவலகத்துக்கு அந்த மனுக்களை அனுப்ப போறேன். அவர் அதனை கண்டு கொள்ளவில்லை என்றால் திமுகவினர் 5 பேர் கொண்ட குழு அமைத்து தலைமை செயலாளருக்கு இந்த கோரிக்கை மனுக்களை அனுப்பி வைக்கப் போகிறோம். இதேபோல் மாவட்ட ஆட்சியருக்கும், துறை சார்ந்த அதிகாரிகளுக்கும், திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுப்பி வைப்பார்கள்.

மக்களின் கோரிக்கைகளை ,வேண்டுகோள்களை ,தேவைகளை அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று அரசாங்கத்தை செயல்பட வைப்போம் என்று உறுதியளிக்கிறேன். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களின் நலனே எங்கள் தலையாய கடமையாகக் கொண்டு இருக்கிறோம் ஒன்றிணைவோம் வா என்று வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |