Categories
உலக செய்திகள்

“எனக்கு கொரோனா வேணும்” வழிய போய் தொற்றை வாங்கியவர்கள்…!!

கொரோனா தொற்று ஏற்பட்டால் வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள் என கைதிகள் செய்த செயல்கள் சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது

சீனாவின் தொடங்கி உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்து வரும் கொரோனா தொற்றால் அதிக அளவு பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தை வகித்து வருகின்றது. அறிகுறிகளுடன்  இருப்பவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றது.

சிறையில் அதிகரித்த கொரோனா தாக்கம்

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்சில் இருக்கும் Pitchess சிறைச்சாலை ஒன்றில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த காவல் அதிகாரிகள் சிறையில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்துள்ளனர்.

அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் 

சிசிடிவியில்  சிறையில் இருந்த கைதிகள் சமூக விலகலை பின்பற்றாமல் ஒரே இடத்தில் கூட்டமாக அமர்ந்து சூடான தண்ணீரை ஒரு பாட்டிலில் வைத்து அனைவரும் பகிர்ந்து குடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஒரு மாஸ்க்கை அனைவரும் மாறி மாறி பயன்படுத்தியுள்ளனர். இந்த காட்சிகளை பார்த்த அதிகாரிகள் பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

கைதிகளின் திட்டம்

இந்நிலையில் கைதிகளை பரிசோதனை செய்ய வந்த செவிலியர் அவர்களின் வெப்பநிலையை ஆராய்ந்த பொழுது சூடான தண்ணீர் குடித்ததால் வெப்பத்தின் அளவு அதிகமாகவே காட்டியுள்ளது. கொரோனா அறிகுறிகளில் ஒன்றான உடல் வெப்பம் அதிகரித்தல் காரணமாக தங்களை தனிமைப்படுத்த வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள் என கைதிகள் நினைத்தே இவ்வாறு தவறான செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பு

வீட்டிற்கு செல்லவேண்டி அவர்கள் செய்த தவறினால் 21 பேருக்கு உண்மையாகவே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கைதிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். ஆனால் அவர்கள் திட்டப்படி வீட்டிற்கு அனுப்பப்படவில்லை சிறையிலேயே தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பரப்பிய குற்றம்

வீட்டிற்கு செல்லும் நோக்கத்துடன் வேண்டுமென்றே மற்றவர்களுக்கு கொரோனா தொற்றை பரப்பிய காரணத்தினால் சிறை கைதிகள் யாரும் வீட்டிற்கு போவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே தோன்றுகின்றது.

Categories

Tech |