10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்கவேண்டும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இன்று காலை தலைமை செயலகத்தில்செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தள்ளி வைக்கப்பட்டிருந்த பத்தாம் வகுப்புத் தேர்வு பொது தேர்வு நடத்துவது குறித்த தேதி அறிவித்திருந்தார். குறிப்பாக ஜூன் 1முதல் ஜூன் 12 வரை பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் என்றும், அதேபோல ஒத்திவைக்கப்பட்ட பதினோராம் வகுப்பு தேர்வு தேர்வு ஜூன் இரண்டாம் தேதியும், தேர்வை எழுதாமல் விட்ட பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ஜூன் 4-ஆம் தேதியும் நடைபெறுமென்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
மேலும் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் தற்போது திமுக தலைவர் மு க ஸ்டாலின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். கொரோனா கட்டுக்குள் வந்து, இயல்பு வாழ்க்கை திரும்பியதாக உறுதி செய்யாட்ட பிறகு மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மனதளவில் தயாராகிய பிறகு தேர்வை நடத்த வேண்டும்.