Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 690ஆக உயர்வு!!

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 587ல் இருந்து 690 ஆக அதிகரித்துள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் உட்பட பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபர் வசிக்கும் பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. அப்பகுதி முழுவதும் மாநகராட்சி மற்றும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

அப்பகுதி மக்கள் குடியிருப்பு பகுதியை விட்டு வெளியே வரவோ, வெளியாட்கள் உள்ளே நுழைவோ அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தற்போது, ராயபுரம், தண்டையார்பேட்டை, திரு.வி.க.நகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மண்டலங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் நேற்று வரை கொரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8002-ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 538 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனவால் 4371 பேர் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |