Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு… கடின உழைப்பு தேவை ….பொறுமை அவசியம் …!

மிதுன ராசி அன்பர்களே …!     எதிலும் கவனமாக இருந்தால் அனைத்து விஷயங்களையும் சிறப்பாக நாடக்கும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கொஞ்சம் பொறுமையாக இருக்கவேண்டும். வாக்குவாதங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். குடும்பத்தாரிடம் அமைதியாக பேசவேண்டும். காரியங்கள் கை கூட கடினமாக உழைக்க வேண்டும். இன்று சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான சூழ்நிலையில் உங்களுக்கு கைகொடுக்கும் இருந்தாலும் கொஞ்சம் கவனமாக இருங்கள்.

புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக அலையவேண்டியிருக்கும். இன்று காரியங்கள் கூட ஓரளவு தடையாக தான் நடந்து முடியும். மற்றவர்களிடம் கொஞ்சம் சுமுகமாக செல்வதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். அதேபோல இன்று புதிதாக ஏதும் தொடங்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம்.

வாக்குறுதிகள் தயவு செய்து கொடுக்க வேண்டாம். வாகனத்தில் செல்லும் போது ரொம்ப பெருமையாக செல்லுங்கள். உடல் உபாதைகள் கொஞ்சம் தொந்தரவைக் கொடுக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெளிர் நீலநிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம் மற்றும் இளம்மஞ்சள் நிறம்.

 

Categories

Tech |