Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னைக்கு 2 நாட்கள் மட்டுமே ரயில் சேவை – மத்திய அரசு தகவல் …!!

சென்னைக்கு ரெண்டு நாள் மட்டுமே ரயில் சேவை இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைசகம் தெரிவித்துள்ளார்.

நேற்று பிரதமர் நரேந்திர மோடியுடன் நடந்த ஆலோசனை கூட்டம் தமிழக முதலமைச்சர் பங்கேற்று ஒரு மிக முக்கியமான கோரிக்கை முன்வைத்துள்ளார். அதாவது சென்னையை பொருத்தவரை கொரோனா எண்ணிக்கை மிகவும் மிக மிக அதிகமாக உள்ள காரணத்தால் மே 31-ஆம் தேதி வரை சென்னைக்கு ரயில்களை இயக்க வேண்டாம் என்ற கோரிக்கை வைத்திருந்தார். தற்போது அதே கோரிக்கையை வலியுறுத்தி ஒரு கடிதத்தை மத்திய ரயில்வே துறை அமைச்சகத்துக்கும்,  மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் முதலமைச்சர் அனுப்பி உள்ளார்.

அந்த கடிதத்தில் மத்திய ரயில்வே துறை டெல்லி – சென்னை மற்றும் சென்னை டூ  டெல்லிக்கு ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கப்படும் என்று அறிவித்து இருந்தது. தமிழகத்துக்கு மே 31-ஆம் தேதி வரை வழக்கமாக இயக்கப்படும் ரயில் சேவைகளை தொடங்காமல் இருக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை முன் வைத்து இருந்தார். இருப்பினும் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட காரணத்தினால் இரு தினங்களில் 14 மற்றும் 16 ஆகிய இரண்டு தினங்கள் மட்டும் ரயில் சேவை இயக்கப்படும் என்று ரெயில்வே துறை அறிவித்துள்ளது.

Categories

Tech |