Categories
தேசிய செய்திகள்

சென்னைக்கு 2 ரயில்கள் தவிர வழக்கமான ரயில் சேவைகள் இயக்கப்படாது: மத்திய ரயில்வே

சென்னைக்கு 2 நாள் மட்டுமே ரயில் சேவை இயக்கப்படும் என மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.

மே 14 மற்றும் 16 ஆகிய இரண்டு தேதிகளில் மட்டுமே ரயில் சேவை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தேதிகளில் மட்டும் டெல்லி-சென்னைக்கு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மே 14,16 தேதிகளில் முன்பதிவு செய்யப்பட்டதால் 2 நாள் மட்டும் ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முன்னதாக, சென்னையில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதால் மே 31ம் தேதி வரை  ரயில்களை இயக்க வேண்டாம் என ரயில்வே அமைச்சருக்கு முதல்வர் கடிதம் எழுதியிருந்தார். ராஜ்தானி உள்ளிட்ட குளிர்சாதன வசதி உள்ள ரயில்கள் மூலம் தொற்று பரவக்கூடும் என்பதால் பயணிகளை பரிசோதித்தே அனுமதிக்க வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் பிரதமருடனான காணொலியில் முதல்வர் பழனிசாமி விடுத்த கோரிக்கையை ஏற்று ரயில்வே இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் 2 ரயில்கள் தவிர வழக்கமான ரயில் சேவைகள் இயக்கப்படாது என ரயில்வே அறிவித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |