சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,500யை கடந்துள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
உலகிற்கே பெருந்தொற்றாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவின் தாக்கம் இந்தியாவிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சராசரியாக ஒவ்வொரு நாளும் மூவாயிரம், நாலாயிரம் என்ற அளவில் உயர்ந்து கொண்டு வருவது மத்திய அரசுக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக வருகின்ற 17 ஆம் தேதியோடு ஊரடங்கு முடிவடைய இருக்கும் நிலையில் இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு 71,000யை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.
முக்கிய நகரங்களான மகராஷ்டிரா, டெல்லி, சென்னை போன்றவை கொரோனாவின் மையமாக விளங்குகின்றது . தமிழகத்தில் கோயம்பேடு சந்தை மூலமாக எதிர்பார்க்காத அளவுவுக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நேற்று வரை 8,000 ஆயிரத்தை கடந்தது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 4,372 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தை மூலமாக திருவாரூர், கடலூர், அரியலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், பெரம்பலூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களுக்கு கொரோனா அதிகளவு பரவியது.
இந்த இன்று வெளியான தகவலில், தமிழகத்தில் மேலும் 716 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 8,718 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 510 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அங்கு மட்டும் 4,882 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 6520 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே போல இன்று ஒரே நாளில் 83 பேர் குணமடைந்துள்ளதால் மொத்த எண்ணிக்கை 2,134ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் என்றும் இல்லாத வகையில் 8 பேர் மரணம் அடைந்ததால் பலியானோர் எண்ணிக்கை 61ஆக அதிகரித்துள்ளது.