Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

4ஆவது முறையாக ஊரடங்கு நீட்டிப்பு : பிரதமர் பேசிய முழு உரை இதோ …!!

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70ஆயிரத்தை உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. 2,300க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில்கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 17 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மே 3ம் தேதி ஊரடங்கு உத்தரவு இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் ஊரடங்கு உத்தரவானது இரண்டாம் முறையாக மே 17ம் தேதி வரை நீடிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவானது முடியவடைய இன்னும் 5 நாட்களே இருக்கும் நிலையில் நேற்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனை 6 மணி நேரத்துக்கும் அதிகமாக நடைபெற்றது. இதில் ஊரடங்கை மேலும் நீடித்து அதிகாடியான தளர்வுகளை கொடுக்கலாம் என்றும், மாநில முதல்வர்கள் 15ஆம் தேதி ஒரு அறிக்கையை மத்திய அரசுக்கு கொடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தியதாக சொல்லப்படுகின்றது.

இந்த நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் பேசுவதாக காலை பிரதமர் அலுவலகம் தெரிவித்ததையடுத்து தற்போது பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசினார்.

பிரதமர் மோடி பேசிய முழு உரை:

உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு  3 லட்சம்  பேர் உயிரிழந்து இருப்பது வேதனை அளிக்கிறது. இந்த ஒரு வைரஸ் ஒட்டு மொத்த  உலகத்தையே சின்னாபின்னமாக்கியிருக்கிறது. ஒரே வைரஸ் நம்மை வெகுவாக பாதித்துள்ளது. இதுபோன்ற உலகளவிய பொது முடக்கம் இதற்கு முன்பு உலகம் காணாதது. கொரோனாவுக்கு எதிராக 4 மாதங்களாக ஒட்டு மொத்த உலகமே போராடி வருகிறது.கொரோனா வைரஸில் இருந்து உயிர்களை காப்பாற்ற உலகமே முயற்சித்து வருகிறது.

கோடிக்கணக்கான மக்கள் கடுமையான சூழலை சந்தித்துள்ளனர். 4 மாதங்களில் 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கூடுதல்  உறுதியுடன்  கொரோனா வைரசின் தாக்குதலை சமாளிக்க தயாரக வேண்டும். வைரசுக்கு பிந்தைய உலகை இந்தியா முன்னின்று நடத்த வேண்டும். தற்சார்பு என்பதுதான் இந்தியாவின் கலாசாரம். உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் வளர்ச்சி உலகத்தின் வளர்ச்சிக்கு வித்திடும்.

கோடிக்கணக்கான மக்கள் கடுமையான சூழலை சந்தித்து வருகின்றனர். இது விட்டுவிடும் நேரமல்ல. இது வெற்றி பெற வேண்டிய நேரம். உலகின் கொள்கைகளை இந்தியா மாற்றி வருகிறது. தன்னம்பிக்கை நிறைந்த இந்தியா இன்று உலகிலேயே முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. y2k பிரச்சினையை எப்படி க்டந்து வந்தோமே அதேபோல் இந்தியாவால் இதையும் வெல்ல முடியும். இந்த சிக்கலை தனக்கான வாய்ப்பாக இந்தியா மாற்றிக்கொண்டிருக்கிறது.

உலகுக்கு இந்தியா வழங்கியுள்ள பெரும் பரிசு யோகா பயிற்சிகள் ஆகும். உலகம் என்பது ஒரே குடும்பம் தான் என்பது  இந்தியாவின் நிலை நமக்கு எப்போதும் சுயநலமில்லை. யாரையும் சார்ந்திராமல் தன்ன்னம்பிக்கையுடன் இருப்போம் என 130 கோடி  இந்தியர்களும் உறுதி ஏற்க வேண்டும். தன்னிறைவு பெற்ற இந்தியா உருவாகும். எந்த ஒரு இலக்கையும் அடைவது சாத்தியமில்லை என்பதே இந்திஅயவுக்கு இல்லை.

இந்திய மருந்துகள் உலகிற்கே தன்னம்பிக்கை கொடுத்து வருகிறது. மனித நேயம் தோற்காது களைப்பும் அடையாது. இந்தியாவின் வளர்ச்சியில்  5 முக்கிய அம்சங்களை கொண்டது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிதம் கொரோனாவுக்கு எதிரான போருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.சிறப்பு திட்டங்கள் மூலம் ஏழை எளிய மக்கள், விவசாயிகள், நடுத்தர மக்கள் பயன்பெறுவர். எல்லா துறைகளையும் கணக்கில் கொண்டு பொருளாதார சிறப்பு தொகுப்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் உற்பத்தி, விற்பனை நிநியோகம் இவைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். எதிர்வரும் நாட்களில் இந்த திட்டம் பற்றி நிதியமைச்சர் விரிவாக அறிவிப்பார். இந்திய அரசு கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் நேரடியாக ஏழைகளின் பைகளுக்கு செல்கிறது.  நான்காம் கட்ட ஊரடங்குக் பற்றி மே .18க்குள் உங்களுக்குள் தெரிவிக்கப்படும். மேம்படுத்தப்பட்ட மற்றும் மாற்றியமைக்கப்பட்ட ஊரடங்காக நான்காம் கட்ட ஊரடங்கு இருக்கும்.

Categories

Tech |