Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74,281ஆக உயர்வு – மாநில வாரியாக முழு விவரம்!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74 ஆயிரத்தை கடந்தது. நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74,281ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,525 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 24,386 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,293லிருந்து 2,415ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 122 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 24,427 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத் – 8,903, தமிழ்நாடு – 8718, டெல்லி – 7639, ராஜஸ்தான் – 4126 பேர் பாதிக்கப்பட்டுள்னர். மத்தியபிரதேசம் – 3,986, உத்தரபிரதேசம் – 3,664, ஆந்திரா – 2,090, பஞ்சாப் – 1,914, மேற்கு வங்கம் – 3,986, உத்தர பிரதேசம் – 3,664, ஆந்திரா – 2090, பஞ்சாப் – 1,914, மேற்கு வங்கம் – 2,174, தெலுங்கானா – 1,326, ஜம்மு – காஷ்மீர் – 934, கர்நாடகா – 925, ஹரியானா – 980, பீகார் – 831, கேரளா – 524 பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தற்போது 47,480 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை 3ம் முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, “இந்தியாவில் அமல்படுத்தப்பட உள்ள லாக்டவுன் 4 மிகவும் மாறுபட்டதாக இருக்கும், மே 18ம் தேதிக்கு முன் இதற்கான விவரங்கள் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |