கல்வி முறையில் கொரோனா ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
தற்போது நம்மை அன்றாடம் பாடுபடுத்தி எடுத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் வாழ்வியலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி சென்றுள்ளது. அந்த வகையில், இணைய வழிக் கல்வியில் ஒரு புதிய மாற்றத்தை இந்த வைரஸ் நோய் ஏற்படுத்தியுள்ளது. இந்நாள் வரை இணைய வழி கல்வி என்றால் அது கல்வி கற்பதற்கான கூடுதலான ஒரு வசதிக்காக மட்டுமே பார்க்கப்பட்டது.
ஆனால் அந்த இணைய வழி கல்வி இப்போது பிரதான கல்வியாக மாறக்கூடிய வாய்ப்பு ஏராளமாக உள்ளது. உதாரணமாக கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மாணவர்களுக்கிடையே சமூக இடைவெளியை கடைபிடிக்க நேரிட்டால், 50 சதவிகித மாணவர்களை மட்டும் தான் பள்ளியில் அனுமதிக்க முடியும்.
இதை தான் கல்வியலாளர்கள் தற்போது அதிகாரிகளிடம் பரிந்துரை செய்து வருகின்றனர். இது நடைமுறை படுத்தப்பட்டால் மீதமுள்ள 50 சதவிகிதமானவர்களுக்கு வீட்டிலிருந்தே ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும். இதன் மூலம் ஆன்லைன் கிளாஸ், இணையதள வழி கல்வி என்பது சாதாரணமாக ஒன்றாக வருங்காலத்தில் மாறிவிடும்.