ஆன்லைன் வர்த்தகத்தின் மதிப்பு இனி வரக்கூடிய காலங்களில் அதிகரிக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
கொரோனா வைரஸ் நோய் இன்று பலரிடையே வாழ்வியல் முறைகளை ஒட்டுமொத்தமாக மாற்றிவிட்டது. நகரங்களில் வசிப்போர் எல்லாம் வார இறுதியில் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் ஷாப்பிங் மால் உள்ளிட்டவற்றுக்கு சென்று ஷாப்பிங் செய்து வந்து பொழுதை கழித்து மனமகிழ்ந்து வருவர். அதில் ஒரு அனுபவம் இருக்கிறது என்றும் பெருமையாக கூறி வந்திருந்தனர்.
அவ்வாறு கூறிக் கொண்டிருந்தவர்கள், அனைவரும் தற்போது ஆன்லைன் ஷாப்பிங்க்கு டோட்டலாக மாறிவிட்டனர். பல்வேறு துறைகளில் பல்வேறு மாற்றங்களை இந்த வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. அது ஏற்படுத்திய மாற்றங்களில் மிகப்பெரிய மாற்றம் மின்வர்த்தக துறையில் தான்.
இதனுடைய அருமையை தற்போது தான் பலரும் உணரத் தொடங்கியுள்ளனர். ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வர பலர் ஆன்லைனில் வீட்டில் இருந்த படி ஆர்டர் செய்து பொருட்களை வீட்டிற்கு தேடி வரவழைத்த கொண்டனர். ஒருகாலத்தில் எலக்ட்ரானிக் சாதனங்கள்,
ஆடைகள் என சமூக வலைதளங்களில் அதிகம் விற்பனையாகி வந்த நிலையில், தற்போது அவை மாறி காய்கறிகள், மளிகை சாமான்கள், பழங்கள் உள்ளிட்டவை வீடு தேடி வந்து வழங்கப்படுகின்றன. எனவே எதிர்காலத்தில் இந்தத் துறையில் மிகப்பெரிய போட்டி ஏற்படுவது கட்டாயம்.