Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கோயம்பேட்டில் உணவு, தானிய சந்தை செயல்பட அனுமதி கோரி வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

கோயம்பேட்டில் உணவு, தானிய சந்தை செயல்பட அனுமதி கோரி வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயம்பேட்டில் உணவு, தானிய சந்தை செயல்பட அனுமதி கோரி கோயம்பேடு உணவு தானிய விற்பனையாளர்கள் சங்க தலைவர் சந்திரசேகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கோயம்பேடு உணவு தானியங்கள் விற்பனையகங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். விற்பனையகங்கள் மூடப்பட்டுள்ளதால் பருப்பு, தானியங்கள் விலை உயர்ந்துள்ளது. மேலும் பருப்பு, தானியங்களை பதுக்கி வைத்து அதிக விற்பனைக்கு விற்பனை செய்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.

எனவே கோயம்பேட்டில் உணவு, தானிய சந்தை செயல்பட அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி துரைசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இது குறித்து பதில் அளிக்க தமிழக அரசு கால அவகாசம் கேட்ட நிலையில் மே 26ம் தேதிக்குள் த சிஎம்டிஏ செயலர், சென்னை மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையர் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

தமிழகத்தில் கோயம்பேடு தொடர்புகள் மூலம் சென்னையில் உள்ள பகுதிகளிலும், பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. கோயம்பேடு சந்தை மூலம் ஆயிரக்கணக்கானோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோயம்பேடு சந்தையானது கடந்த 5ம் தேதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில் திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல கோயம்பேட்டில் இருந்த பூக்கடைகள் மாதரவாரம் பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |