Categories
அரசியல்

“கொரோனா CHANGE” சிட்டி LIFE போதும்….. கிராமம் தான் பெஸ்ட்…. மக்கள் கருத்து…!!

கிராமங்களிலிருந்து நகர்ப்புறங்களை நோக்கி ஓடிய மக்கள் கொரோனா தாக்கத்திற்கு பின் நகர்ப்புற ஆசையை விட்டுவிட்டு கிராமங்களை நோக்கி குடிபெயர ஆரம்பிப்பார்கள் என ஒரு சில தரவுகளின் அடிப்படையில் கூறப்பட்டுவருகிறது.

கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து பல நிறுவனங்களும் கம்ப்யூட்டர் துறை ரீதியான பணிகளும் தங்களது நிறுவன ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே பணியாற்ற அறிவுறுத்தி வந்தனர். சென்னையை பொருத்தவரையில் 70 சதவிகிதம் ஐடி துறையை சார்ந்த வெளியூர்களில் இருந்து ஆட்கள் இங்கே வந்து பணிபுரிந்து வருகின்றனர்.

ஐடியில் பணிபுரியும் பலர் சொந்த வீடு வாங்க நினைத்தால் சென்னை மாநகரின் மையப் பகுதிகளில் உள்ள ஏரியாக்களில் வாங்க நினைப்பர். அதற்கான காரணம் அங்கே இருக்கக்கூடிய சுற்றுச்சூழல் வேலைக்கு சென்று வரக் கூடிய தொலைவு இதையெல்லாம் கணக்கிட்டு தான். இனி வீட்டில் இருந்து வேலை என்பது நடைமுறை படுத்தபட ஏராளமான வாய்ப்புகள் உள்ளது. இப்படி நடைமுறைப்படுத்தப்பட்டால் நிறுவனங்களுக்கு லாபம் தான். ஏனெனில் கட்டுமானச் செலவுகள் இல்லை.

நிறுவனத்தை பராமரிக்க வேண்டிய அவசியமில்லை. ஊழியர்களுக்கு தேவையான இணையதள வசதியை மட்டும் ஏற்படுத்தி வீட்டிலிருந்தே அவர்களை வேலை வாங்கி லாபம் சம்பாதிக்கலாம் என்று நினைப்பர். இவ்வாறு நடப்பதன் மூலம் நகர்ப்புற வீடுகள் அமைக்க வேண்டும் என்று எண்ணுவோரின் ஆசை எல்லாம் தவிடுபொடியாக்கி நகர்ப்புறத்திற்கு வெளியே ஒரு மணி அல்லது இரண்டு மணி நேர பயணம் மேற்கொள்ளும் வகையில்,

இருந்தாலும் பரவாயில்லை என்று அங்கேயே குடிபெயர மக்கள் விரும்புவர். இந்த மாற்றங்களை எல்லாம் கொரோனா ஏற்படுத்தும் என மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பு நாம் அறிந்திருக்க மாட்டோம். பாதிப்பு இன்னும் எத்தனை மாதங்கள் அல்லது ஆண்டுகள் இந்திய நாட்டில் இருக்கும் என்பது தெரியாது.

ஆனால் அது இருக்கும் வரை நம் ஆரோக்கியத்தை சார்ந்த தொழில் மற்றும் வர்த்தக ரீதியான வளர்ச்சியில் மாற்றம் ஏற்படுமே தவிர, பழைய மாதிரியான தொழில் வர்த்தகத்தில் மாற்றங்களை எதிர்பார்த்து பொருளாதாரம் சரிந்து விட்டது என்று கூறுவதில் அர்த்தமில்லை. மாறாக கொரோனா ஏற்படுத்திய யதார்த்தங்களை புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி கொண்டு முன்னேறுவதே புத்திசாலித்தனம்.

Categories

Tech |