Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை கிண்டியில் 8 பேருக்கும், கோயம்பேட்டில் 8 பேருக்கும் இன்று கொரோனா உறுதி!!

சென்னை கிண்டி மடுவின்கரை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காய்கறி மற்றும் மளிகை கடை நடத்தி வந்த அண்ணன், தம்பிகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வியாபாரிகளான அண்ணன், தம்பிகள் கோயம்பேடு சென்று காய்கறி வாங்கி வந்துள்ள நிலையில், கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, சென்னை கோயம்பேடு பகுதியில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை கோயம்பேடு சந்தை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 360 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்த முடியாது அளவுக்கு அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று வரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,882 ஆக உயர்ந்துள்ளது.

அதில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் ராயபுரம் – 828 பேரும், கோடம்பாக்கத்தில் – 796 பேரும், திரு.வி.க நகரில் – 622 பேரும், அண்ணா நகர் – 405 பேரும், தேனாம்பேட்டையில் – 522 பேரும், வளசரவாக்கத்தில் 426 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இன்றும் சென்னையில் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன.

Categories

Tech |