Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைனில் விற்க உத்தரவிட கோரிய வழக்கு தள்ளுபடி – மனுதாரருக்கு அபராதம்!

டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்க உத்தரவிட கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தமிழக உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 6ம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடையில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால் தமிழக அரசு அறிவித்தபடி சென்னையை தவிர 7ம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. மே 7 மற்றும் 8ம் தேதி கடைகள் திறந்திருந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் ரூ.294 கோடிக்கு மது விற்பனையாகிருந்தது. இந்த சூழவில் சமூக இடைவெளி பின்பற்றாததால் டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த நிலையில், டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ராம் குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் டாஸ்மாக்கில் மது விற்பனை செய்ய உரிய ரதீது வழங்கப்படவில்லை, கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என குற்றம் சட்டியுள்ளார். இதனால் டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்க உத்தரவிட வேண்டும்.

இதற்கென மொபைல் அப்ளிகேஷன், இணையதளம் தொடங்க வேண்டும் என கோரியிருந்தார். இது குறித்து வழக்கு தொடர மனுதாரருக்கு உரிமை இல்லை என அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார். அதனால் மனுவை திரும்ப பெற்று கொள்வதாக மனுதாரர் கூறினார். ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதி, தள்ளுபடி டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்க உத்தரவிட கோரிய மனுவை தள்ளுபடி செய்துள்ளது. மேலும் மனுதாரருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, அபராதத் தொகையை முதலமைச்சர் நிவாரண நிதியில் ஒரு வாரத்தில் செலுத்தவும் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

Categories

Tech |