Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா இல்லாத மாவட்டமானது கோவை… பாதிக்கப்பட்ட 145 பேரும் டிஸ்சார்ஜ்!!

கொரோனா இல்லாத மாவட்டமாக கோவை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடைசி கர்ப்பிணி பெண் ஒருவர் இன்று குணமடைந்துள்ளார். கோவையில் இதுவரை 146 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில், நேற்றுவரை பாதிக்கப்பட்ட 145 பேரில் 140 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று மீதமுள்ள 5 பேரும் குணமடைந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து கோவை கொரோனா இல்லாத மாவட்டமானது என மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 9 நாட்களாக கோவை மாவட்டத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 9 நாட்களாக கோவையில் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் 2,952 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் யாருக்கும் புதிதாக நோய் தொற்று ஏற்படவில்லை. இதையடுத்து, கோவையில் மாநகரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 25 பகுதியில், 23 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |