சென்னையில் ஒரே குடும்பத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது …!
சென்னை எம்.ஜி.ஆர் நகர் அருகே உள்ள ஜாஃபர்கான் பேட்டையில் பெட்டிக்கடை நடத்தி வரும் 48 வயதுள்ள ஒருவருக்கு கடந்த 9ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரது மனைவி,தாய்,தந்தை,இரண்டு மகன்கள் மற்றும் மறுமகள் உள்ளிட்ட 6 பேரை தனிமைப்படுத்தி சுகாதாரத்துறை பரிசோதனை செய்தது. பரிசோதனை முடிவில் 6 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அனைவரும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே சென்னை தியாகராய நகரில் காவல் துணை ஆயருக்கு கொரோனா தோற்று இல்லை என்று நேற்று நடந்த பரிசோதனை முடிவு வெளியாகியுள்ளது. தனியார் மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையிலும் கொரோனா தொற்று இல்லை என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதேபோன்று அண்ணாநகர் துணை ஆயிருக்கு கொரோனா தொற்றி எனக்கூறி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தோற்று இல்லை என்பதால் இரண்டு நாட்களுக்கு பிறகு அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.