Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

நாளைய(14.05.2020 ) நாள் எப்படி இருக்கும்…? ராசிபலன் இதோ..!!

14-05-2020, வைகாசி 01, வியாழக்கிழமை.

இராகு காலம் – மதியம் 01.30-03.00

எம கண்டம்- காலை 06.00-07.30

குளிகன் காலை 09.00-10.30.

நாளைய  ராசிப்பலன் –  14.05.2020

மேஷம்

இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். உத்யோகத்தில் அனுகூலம் உண்டு. பெண்கள் குடும்பத்தில் பொறுப்புடன் செயல்படுவார்கள். உடன்பிறந்தவர்களால் நன்மை உண்டு. தொழில் தொடர்பாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். நவீன பொருட்களை வாங்குவீர்கள்.

ரிஷபம்

இன்று பிள்ளைகளால் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் நன்மையுண்டு. நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

மிதுனம்

உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் காலதாமதம் ஏற்படும். பயணங்களையும் புதிய முயற்சிகளையும் தள்ளி வைப்பது சிறப்பு. ஆரோக்கியத்தில் ஒரு சில பாதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது.

கடகம்

குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உறவினர்கள் மூலம் நற்செய்திகள் வந்து சேரும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.

சிம்மம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலப் பலனை கொடுக்கும். வியாபாரத்தில் நண்பர்கள் ஒற்றுமையாக செயல்பட்டு அனுகூல பலன்களை அடைவீர்கள்.

கன்னி

எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே மனஸ்தாபம் ஏற்படலாம். வியாபாரத்தில் நண்பர்கள் ஆதரவாக செயல்படுவதால் நன்மை அடைவீர்கள். விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

துலாம்

இன்று குடும்பத்தில் சுபச்செலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். பெண்களுக்கு பணிச்சுமை குறையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.

விருச்சிகம்

குடும்பத்தில் பண வரவு சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் நன்மை உண்டு. தொழிலில் நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சுமூகமான நிலை காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன்கள் குறையும். உத்யோகத்தில் இருப்பவர்கள் தங்கள் திறமையால் பாராட்டப்படுவீர்கள்.

தனுசு

இன்று உறவினர்கள் வழியில் குடும்பத்தில் வீண் செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் இருக்கும் பிரச்சனைகளை எளிதில் சமாளிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்கள் உங்கள் தேவை அறிந்து உதவி செய்வார்கள். உபயோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

மகரம்

இன்று குடும்பத்தில் உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். புதிய பொருள் சேர்க்கை உண்டு. தொழில் தொடர்பாக கடந்த கால சிக்கல்கள் விலகும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் அனுகூல பலன் கிடைக்கும்.

கும்பம்

இன்று நீங்கள் செய்யும் காரியங்களில் மற்றவர்கள் தலையிட்டால் தடைபடலாம். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகலாம். பொறுமையுடன் நடந்து கொள்வதால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

மீனம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். தொழில் தொடர்பாக அனுகூலப் பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். உபயோகத்தில் சிலரின் திறமைக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் வந்து சேரும்.

Categories

Tech |