Categories
தேசிய செய்திகள்

பி.எப் நிதியில் தொழிலாளர் பங்கு தொகையை 3 மாதங்களுக்கு அரசு செலுத்தும்: மத்திய அமைச்சகம் அறிவிப்பு!

பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான விரிவான அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். அதில், தொழிலாளாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதியில், தொழிலாளர் பங்கு தொகையில் ஒரு தொகையை அரசு செலுத்தும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தொழிலாளர் வைப்பு கணக்கில் மார்ச், ஏப்ரல்,மே மாதங்களுக்கான வைப்புத்தொகை அரசால் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் வெளியிட்டுள்ள திட்டங்களின் விவரம்:

* மேலும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு, ரூ.30,000 கோடி சிறப்பு மூலதனம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* அதேபோல வங்கி அல்லாத வீட்டுக்கடன் வழங்கும் நிதி நிறுவனங்களுக்கும் சிறப்பு மூலதனம் வழங்கப்படும் என கூறியுள்ளார். அவ்வாறு வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், வீட்டுக்கடன் நிறுவனங்களுக்கு ரூ.45,000 கோடி கடன் உதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கா பகுதி கடன் உறுதி திட்டம் 2.0 என்று அழைக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதற்கென பங்கு வர்த்தகத்தின் மூலமாக கடன் பத்திரங்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

* கடந்த மார்ச் 25க்குள், ரியல் எஸ்டேட் துறையில் கட்டுமானம் முடிந்த வீடுகள் விற்பனை மற்றும் பதிவு செய்வதற்கான கால அவகாசம் 6 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா நிகழ்வுகளை கடவுளின் செயலாக கருதி ரியல் எஸ்டேட் துறைக்கு மாநில அரசுகள் உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

* மின் விநியோக நிறுவனங்களுக்கு ரூ.90,000 கோடி அளவுக்கு கடன் உதவி வழங்கப்படும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

* சாலை, ரயில்வே உள்ளிட்ட ஒப்பந்ததாரர்களின் வங்கி உத்தரவாதம் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கட்டுமான தோட்டங்களின் பதிவுக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

* 41 கோடி பயனாளிகளுக்கு ரூ.52,000 கோடி மதிப்பிலான நிவாரண உதவிகள் நேரடியாக வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

* 6.5 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 71,000 டன் உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டள்ளது.

* வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்கு சேர வேண்டிய ரூ.18,000 கோடி தொகையை உடனடியாக விடுவிக்கப்பட்டது.

* 5 அம்ச நோக்கத்துடன் ரூ.20 லட்சம் கொடியிலான சுயசார்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

* சிறு – குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்கப்படும் எனவும், இதனால் 45 லட்சம் நிறுவனங்கள் பயனடையும்.

* ரூ.100 கோடி வரை விற்று, முதல் காணும் நிறுவனங்கள் ரூ.3 லட்சம் கோடி கடன் திட்டத்தால் பயன்பெறுவர்.

* இந்த ரூ.3 லட்சம் கோடி கடன் திட்டம் அக்டோபர் மாதம் 31ம் தேதி வரை செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

* அதேபோல, கடன் சுமையில் சிக்கி நிதி உதவி தேவைப்படும் சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடி கடன் வழங்கப்படும். இதன் மூலம் 2 லட்சம் நிறுவனங்கள் பயன்பெறும்.

* சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடனை திருப்பி செலுத்த 4 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்படும்.

Categories

Tech |