தமிழகம் மற்றும் புதுவையில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது .
மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடத்தைப்பெறுமென்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதோடு சேர்த்து 18 சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென்றும் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட் , இந்திய கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் ஐ.ஜே.கே ஆகிய கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து விட்டன. காங்கிரஸ் கட்சி மட்டும் வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்தது . இந்நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியயல் வெளியாகியுள்ளது.
4. கரூர் – செல்வி எஸ். ஜோதிமணி
5. திருச்சிராப்பள்ளி – திரு சு. திருநாவுக்கரசர்
6. தேனி – திரு. EVKS இளங்கோவன்
7. விருதுநகர் – திரு மாணிக்கம் தாகூர்
8. கன்னியாகுமரி – திரு H. வசந்தகுமார்நாளை நமதே. நாற்பதும் நமதே.
வாக்களிப்பீர் கை சின்னத்திற்கே (2/2) pic.twitter.com/km04hrD8O7
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) March 22, 2019
கிருஷ்ணகிரி – டாக்டர் ஏ.செல்லகுமார்
திருவள்ளூர் – டாக்டர் கே.ஜெயக்குமார்
ஆரணி – எம்.கே.விஷ்ணு பிரசாத்
கரூர் – ஜோதிமணி
திருச்சி – சு.திருநாவுக்கரசர்
விருதுநகர் – மாணிக்கம் தாகூர்
கன்னியாகுமரி – ஹெச்.வசந்தகுமார்
தேனி- ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
சிவகங்கை தொகுதியில் யார் போட்டியிடுவார் என்ற விவரம் அறிவிக்கப்படவில்லை.
புதுவை – வைத்தியலிங்கம் ஆகிய வேட்பாளர்கள் போட்டியிடுவார் என்று காங்கிரஸ் கட்சியின் தலைமை வலியுறுத்தியுள்ளது.