Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு…ஆதரவு நீடிக்கும்…உழைப்பு அதிகரிக்கும் …!

மேஷ ராசி அன்பர்களே …!    தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள். முயற்சி திருவினையாக்கும் எனவே முன்னேறும் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். எப்பொழுதும் வெற்றி உங்கள் பக்கம் உண்டு. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு நீடிக்கும்.

தொழில் விரிவாக்கம் பற்றிய எண்ணம் வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்புகளை ஏற்க வேண்டியதாக இருக்கும். கடுமையான உழைப்பு இருந்தாலும் உள்ளம் சந்தோஷமாகவே காணப்படும். இன்று காதலர்களுக்கு மிகவும் உன்னதமான நாளாக இருக்கும். காதலில் புதியதாக வயப்படக்கூடிய சூழலும் இருக்கும்.  திருமண முயற்சிகளை பற்றிய பேச்சுவார்த்தை நடத்துங்கள் மிகச் சிறப்பாகவே இருக்கும்.

உடல் நலத்தைப் பொறுத்தவரை ஒருசில பிரச்சனைகள் இருக்கும்.  இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சித்தர்கள் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |