தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,227ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 380 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,262 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. திருவள்ளூர் -25, செங்கல்பட்டு – 25, திருவண்ணாமலை – 23, கடலூர் – 17, விழுப்புரம் – 7 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை – 5, தேனி – 5 , அரியலூர் – 5, காஞ்சிபுரம் – 4, கரூர் – 2, மதுரை – 2, நாகை – 2, தஞ்சாவூர் – 1, தூத்துக்குடி – 1, பெரம்பலூரில் ஒருவருக்கும் மற்றும் வெளிநாட்டில் இருந்து சென்னை வந்த 5 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 42 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2,176ஆக அதிகரித்துள்ளது.