Categories
சினிமா தமிழ் சினிமா பேட்டி

தல,தளபதியுடன் நடித்த நடிகை மீண்டும் தமிழ் சினிமாவில் களம் இறங்கவுள்ளார்…!!

 விஜய்யுடன் ‘தேவா’  அஜித்துடன் ‘வான்மதி’ ஆகிய படங்களில் ஜோடியாக நடித்தவர் நடிகை ஸ்வாதி.இந்த இரண்டு படங்களும் வெற்றிப்படங்களாக அமைந்தது. இதை தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்துவந்தன. ஆனால், அதையெல்லாம் நிராகரித்து விட்டு விட்டு படிப்புதான் முக்கியம் என்று ஐதராபாத்திற்கு பறந்து சென்றார் ஸ்வாதி. தற்போது, தெலுங்கு  தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கி வருகிறார்.
அவர் அளித்துள்ள  பேட்டி ஒன்றில் ‘நான் நடித்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழ் ரசிகர்கள் என்னை மனதில் வைத்துக்கொண்டு மீண்டும் எப்பொழுது திரையில் தோன்றுவீர்கள்? என்று ஆவலுடன் கேட்கிறார்கள்.
Image result for vijay ajith
இதை தொடர்ந்து இத்தனை வருடம் கழித்தும் இன்னும் இளமையாகவே இருக்கிறீர்கள் என்று அனைவரும் பாராட்டுகிறார்கள். அந்த சமையத்தில்  ஒரு பயணத்தின் போது ஒரு தம்பதியரை சந்தித்தேன். அந்த சந்திப்பிலிருந்து தான் எனக்கு மீண்டும் நடிக்க வேண்டும் என்று முடிவுக்கு வந்தேன். என் குடும்பத்தினரும் எனக்கு முழு ஆதரவோடு இருக்கிறார்கள். நான் அவ்வப்பொழுது தமிழ் படங்களைப் பார்த்து வருகிறேன். சினிமாவை மிகவும் நேசிப்பதோடு. என் ரசிகர்களின் விருப்பத்திற்கிணங்க நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறேன்’. இவ்வாறு ஸ்வாதி கூறியுள்ளார்.

Categories

Tech |