கடக ராசி அன்பர்களே …! இன்று எல்லா நலமும், வளமும் பெறும் இனிய நாளாக இருக்கும். தன வரவு கூடும். பயணங்களால் மனமகிழும். பெண்கள் சிநேகமும் தனக்கென தனி விடும் அமைவதற்கு வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். மற்றவர் நலனுக்காக தன் நன்மை பாராமல் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்தபடி காரியங்கள் நடந்து முடியாமல் கால தாமதம் கொஞ்சம் உண்டாகலாம்.
கவலை வேண்டாம். எல்லாம் மதியத்திற்கு மேல் உங்களுக்கு சரியாகிவிடும். இன்று வீண் வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபடாமல் இருங்கள். தேவையில்லாத பகையை வளர்த்துக் கொள்ள வேண்டாம். உடல் ஆரோக்கியம் கொஞ்சம் பாதிக்கப்படும். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். பயணத்தின் பொழுது சிறு சிறு தடங்கல்கள் வந்து செல்லும். வீண் செலவுகள் இருக்கும். கூடுமானவரை மனதை மட்டும் அமைதியாக வைத்துக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது நல்லது.
பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள். காதலர்கள் இன்று பொறுமையாக செயல்பட வேண்டும். வாக்குவாதத்தில் ஏதும் ஈடுபட வேண்டாம். இன்று ஓரளவு முன்னேற்றம் இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஊதா நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் ஊதா நிறம்.