Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…காரியத்தடைகள் நீங்கும்…துணிச்சல் பிறகும்…!

கன்னி ராசி அன்பர்களே …!   இன்றைய நாள் உற்சாகம் மிக்க உன்னதமான நாளாக இருக்கும். ஆடை ஆபரணங்கள் சேரும். உடன் பிறப்புகளால் உதவிகள் கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் எளிதில் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை கூடும். ஆனால் இன்றைய நாள் பயணங்களால் செலவு ஏற்படும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள்.

எல்லா விஷயத்திலும் இன்று முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் விளையாட்டில் அதிக கவனம் செலுத்துவார்கள். கூடுமானவரை கொஞ்சம் பெருமையாகவும் அமைதி காப்பது ரொம்ப நல்லது. காரியத்தடைகள் நீங்கும். நிலுவையில் உள்ள பணம் கையில் வந்து சேரும். தன்னைத் தானே உயர்த்திக் கொள்வதுடன் மற்றவர்களையும் நீங்கள் உயர்துவீர்கள்.

இதனால் நீங்கள் பெரும் மகிழ்ச்சி கொள்ளும் நாளாக விருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சித்தர்கள் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்கள்: 4 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்.

Categories

Tech |