தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,227ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 42 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2,176ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 23.58% பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் கொரோனோவுக்கு இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 64ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 380 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,262 ஆக உயர்ந்துள்ளது. ஒரு வயது குழந்தை உட்பட 42 குழந்தைகளுக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது , 24 மாவட்டங்களில் இன்று யாருக்கும் புதிதாக கொரோனா பாதிக்கவில்லை என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 2,68,250 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 12,666 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 5,895 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது 6,894 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.