Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு… கோபம் அதிகரிக்கும்…சிந்தனை மேலோங்கும்…!

மகரம் ராசி அன்பர்களே…!     இன்று நீங்கள் கண்டிப்பாக வாயை அடக்கி வம்புக்கு செல்லாது இருப்பதே நல்லது. பெண்களால் பெரிய செலவு கொஞ்சம் இருக்கும். புதிய பொருட்களை தேவைப்பட்டால் மட்டுமே வாங்க வேண்டும். வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் இன்று நிகழும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்பட்டாலும் கொஞ்சம் நீங்கள் பொறுமையாக தான் இருக்க வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே சின்னச்சின்ன கருத்து வேற்றுமைகள் வரக்கூடும்.

பிள்ளைகளின் செயல்பாடுகள் ஆறுதலைக் கொடுக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கூடும்.  செயலால் கோபம் உங்களுக்கு அதிகரிக்கும் தயவுசெய்து கோபம் மட்டும் வேண்டாம். கொடுத்த கடனைத் திரும்பப் பெறுவதில் முழுமூச்சுடன் செயல்படுகிறீர்கள். புதியதாக தயவுசெய்து கடன்கள் ஏதும் வாங்க வேண்டாம். தொழிலை விரிவுபடுத்தலாம் என்ற சிந்தனை மேலோங்கும். காதலர்களுக்கு இன்று ஓரளவு இனிமையான நாளாக  இருக்கும்.

அது போல திருமண முயற்சிகள் போன்ற விஷயத்தில் கவனம் செலுத்துங்கள் அனைத்து விஷயமும் நல்லபடியாக நடத்த முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மயில்நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மயில்நீலம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே சித்தர்கள் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீலநிறம்.

Categories

Tech |