Categories
உலக செய்திகள்

“கொரோனாவால் மட்டும் இறக்கவில்லை” மருத்துவர்கள் இப்படி செய்கிறார்கள்…. வெளியான அதிர்ச்சி வீடியோ…!!

கொரோனா மட்டும் இறப்புக்கு காரணமில்லை என செவிலியர் ஒருவர் காணொளியாக பதிவு செய்துள்ளார்

சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்து வரும் நிலையில் அதிக அளவு பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகின்றது. இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த செவிலியர் நிக்கோல் என்பவர் இரண்டு வெவ்வேறு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைப் பிரிவில் பணிபுரிந்து வருகின்றார்.

சமீபத்தில் இவர் காணொளி ஒன்றில் கண்ணீருடன் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “இங்கு கொரோனாவால் மட்டும் அதிக மக்கள் இறக்கவில்லை. மருத்துவமனையின் அலட்சியத்தாலும் தவறான சிகிச்சை முறையினாலும் தான் மக்கள் அதிகமாக இருக்கின்றனர் என தெரிவித்துள்ளார். குறிப்பாக கருப்பின மக்களையும் அடித்தட்டு மக்களையும் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் அலட்சியப் படுத்துகின்றனர்.

அவர்கள் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு சரியான சமயத்தில் வென்டிலேட்டர் கிடைக்காத காரணத்தினால் எனது கண் முன்னரே மரணமடைகின்றனர். அதுமட்டுமில்லாமல் சரியான மருந்துகளை பயன்படுத்தாமல் தவறாகவே மருந்துகளை பயன்படுத்துகின்றனர். நான் வெள்ளை இனத்தவளாக இருந்தாலும் இந்த அநீதிகளை என்னால் தாங்கிக் கொள்ள இயலவில்லை.

தவறான சிகிச்சை என்று நான் கூறினாலும் அதை காதில் வாங்கி கொள்ளாமல் வேலை முடிந்தது எனக் கூறி என்னை வெளியே அனுப்பி விடுகிறார்கள். மக்கள் அதிகம் நம்பும் மருத்துவர்கள் இவ்வாறு நடந்து கொள்வது பெரும் வேதனையாக உள்ளது. இதனை வெளியே கூறியிருப்பதால் எனக்கு என்ன நடக்கும் என்பது தெரியவில்லை ஆனால் இதனை உலகுக்கு அறிவிக்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே இதனைக் கூறி உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

https://youtu.be/Z06n7QEoZZ4

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |