சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பொது இடங்களில் போராட்டம் நடத்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 9,227 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் 380 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 5,262 ஆக அதிகரித்துள்ளது, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
கடந்த சில நாட்களாக 300க்கும் மேற்பட்டவர்கள் தினசரி பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பொது இடங்களில் போராட்டம் நடத்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. பேரணி, உண்ணாவிரதம், மனித சங்கிலி போன்றவற்றை நடத்தவும் தடை விதிக்கப்ப்டடுள்ளது. வருகிற 28ம் தேதி வரை 15 நாட்களுக்கு இந்த தடை நீடிக்கும் என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. இதனிடையே தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 4,41,888 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.