தமிழகத்திற்கு ஆம்பன் புயல் வருமா ? என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் தரப்பில் வந்திருக்கும் தகவல் என்னவென்றால் தமிழகத்தில், வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே நேற்றைய தினம் தென்கிழக்கு வங்கக்கடலில், அந்தமான் ஒட்டி இருக்கக் கூடிய பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாக்கி உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
வரும் நாட்களில் அதாவது நாளைக்கு நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் பிறகு, புயலாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த புயலுக்கு ஆம்பன் என்ற பெயர் வைப்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த புயல் தமிழகத்துக்கு வருமா? என்று தான் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.
இது சம்பந்தமாக வானிலை ஆய்வு மையம் தரப்பில் இருந்து அதிகாரபூர்வமான தகவல் வந்துள்ளதில் இது தமிழகத்திற்கு வருமா என்பது என்ற தகவல் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. ஆனால் வானிலை தரவுகளை பார்க்கும்போது இது தமிழகத்திற்கு வரும் வாய்ப்பு மிக மிக மிக குறைவு என்று சொல்லப்படுகிறது. அதே போல ஆம்பன் புயல் தமிழகம் நோக்கி வராது என்றும், ஆந்திரா மற்றும் வங்கதேசம் நோக்கி செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.