Categories
உலக செய்திகள்

சீனாவின் மீதான பொருளாதார தடை…?

கொரோனா விவகாரத்தில் சீனா மீது பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது….

கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாவே காரணம் என அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப் உள்ளிட்டோர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்னர். சீனாவிடமிருந்து மிகப்பெரிய தொகையை இழப்பீடாக கேட்க உள்ளதாக அமெரிக்கா கூறிவருகிறது. இந்நிலையில் அமெரிக்கவின் செனட் சபையின் மூத்த உறுப்பினரான லிங்சுகிரகாம் நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்து உள்ளார். அதனை 8 எம்.பிகள் வழிமொழிந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக அமெரிக்கா நடத்திவரும் விசாரணைக்கு ஒத்துழைத்து வைரஸ் குறித்த முழு தகவல்களை அளிக்க சீனாவுக்கு நெருக்கடி தர வேண்டும் என்றும் மனித குலத்திர்க்கு ஆபத்தாக செயல்பட்டு வரும் சீனாவில் உள்ள வன விலங்குகள் சந்தையை மூடவேண்டும் என்றும் இந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை எடுக்காத பட்சத்தில் சீனா மீது பொருளாதாரத் தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை அதிபர் ட்ரம்ப் எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |