Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

3 கோடி விவசாயிகளுக்கு ஏற்கனவே குறைந்த வட்டியில் கடன் அளிக்கப்பட்டுள்ளது – நிர்மலா சீதாராமன் தகவல்!

3 கோடி விவசாயிகளுக்கு ஏற்கனவே குறைந்த வட்டியில் கடன் அளிக்கப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் தகவல் அளித்துள்ளார்.

பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி சிறப்பு நிதித் தொகுப்பு திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். இந்த நிலையில் ‘தன்னிறைவு இந்தியா’ திட்டத்தின் இரண்டாம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார்.

அதில், இன்று ஒன்பது விதமான நடவடிக்கைகள் அறிவிக்கப்பட உள்ளன. புலம்பெயர் தொழிலாளர்கள், தெரு வியாபாரிகள், சிறு விவசாயிகள் தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறும் என அறிவித்துள்ளார். பழங்குடியினருக்கான வேலைவாய்ப்பு போன்றவையும் இந்த அறிவிப்பில் இடம் பெற உள்ளது என கூறிய அவர்,

நேரடியாக பயனளிக்கும் வகையில் 3 கோடி விவசாயிகளுக்கு ஏற்கனவே குறைந்த வட்டியில் கடன் அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். கடந்த 2 மாதத்தில் 25 லட்சம் புதிய கிசான் கிரடிட் கார்டு கொடுக்கப்பட்டுள்ளன. கடந்த இரு மாதங்களில் 25 லட்சம் விவசாயக் கடன் அட்டைகளை அளித்துள்ளோம், அவர்களுக்கு 25 ஆயிரம் கோடி அளித்துள்ளோம், விவசாயிகளை மறந்துவிடவில்லை என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Categories

Tech |