வீட்டுகடனுக்கு மானியம் வழங்க, வீட்டு வசதித்துறையை மேம்படுத்த ரூ.70,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான 2ம் கட்ட அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை சீராக்க ஊக்குவிப்பு திட்டங்களை பிரதமர் அறிவித்திருந்தார். அதற்கான விளக்கத்தை நிதியமைச்சர் நேற்று விளக்கியிருந்தார். இந்த நிலையில் 2வது நாளாக தொகுப்பு திட்டம் குறித்து விளக்கம் அளித்து வருகிறார்.
அதில் அவர் கூறியதாவது, ” வீட்டுக்கடன் மானிய திட்டம் மூலம் 3.3 லட்சம் நடுத்தர குடும்பம் பயனடையும் என்றும் கூறியுள்ளார். வீட்டுக்கடன் மானியத்திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் 12ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ஆண்டில் வீட்டுக்கடன் மணியத்திட்டத்தில் 2.5 லட்சம் நடுத்தர குடும்பம் பலனடையும் என தெரிவித்துள்ளார். மானியத்திட்டதால் இரும்பு, சிமெண்ட், போக்குவரத்து துறையில் தேவை அதிகரித்து வேலைவாய்ப்பு உருவாகும்” என தெரிவித்துள்ளார்.
வேலை வாய்ப்பு திட்டம்:
வேலை வாய்ப்பை ஊக்குவிக்க சிஏஎம்பிஏ நிதிக்கு ரூ.6000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிஏஎம்பிஏ நிதி மூலம் நகர்ப்புற, புறநகர் மற்றும் கிராமப்பகுதிகளில் வேலை வாய்ப்பு உருவாகும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். சிஏஎம்பிஏ நிதி காடுகளை உருவாக்குதல், மரம் நடுதல் வனப்பாதுகாப்பு போன்ற திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.