Categories
அரசியல்

கொரோனா தொற்றில்-இரண்டாம் இடத்தை நெருங்கும் தமிழகம்…!

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களின் பட்டியலில் இன்று தமிழ்நாடு இரண்டாம் இடத்தை அடையும் சூழல்….

இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3722 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை கூறுகிறது. 24 மணிநேரத்தில் 134 பேர் இறந்துவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 78,003 பேர். இவர்களில் 26,235 பேர் குணமடைந்துவிட்டனர். 49,219 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரசுக்கு இதுவரை நாடு முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2549 ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா பாதிப்பில் மராட்டிய மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. அங்கு 25,922 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 975 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டாமிடத்தில் உள்ள குஜராத் மாநிலத்தில் 9267 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழ்நாடு இரண்டாம் இடத்தை அடைவது உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் 9227 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

Categories

Tech |