நபார்டு மூலம் விவசாயிகளுக்கு கூடுதலாக ரூ.30,000 கோடி அவசரகால நிதி வழங்கப்பட உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான 2ம் கட்ட அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை சீராக்க ஊக்குவிப்பு திட்டங்களை பிரதமர் அறிவித்திருந்தார். அதற்கான விளக்கத்தை நிதியமைச்சர் நேற்று விளக்கியிருந்தார்.
இந்த நிலையில் 2வது நாளாக தொகுப்பு திட்டம் குறித்து விளக்கம் அளித்து வருகிறார். அதில் அவர் கூறியதாவது,” கூட்டுறவு வங்கிகள் விவசாய கடன் வழங்க நபார்டு மூலம் ரூ.30,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரபி அறுவடைக்கு பிறகு தற்போதைய காரிப் பருவத்திற்கு விவசாயிகளுக்கு கடன் வழங்க ரூ.30, 000 கோடி பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். இதனால் 3 கோடி விவசாயிகள் பயனடைவார்கள்.
இதுதவிர, நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் ESIC சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 10க்கும் குறைவான தொழிலாளர்களை கொண்ட நிறுவனங்களிலும் ESIC கட்டாயமாக்கப்படும் என அவர் கூறியுள்ளார். மேலும் ஆபத்தான பணிகளில் ஈடுபடும் அனைத்து தொழிலாளர்களுக்கும் ESIC கட்டாயமாக்கப்படும் என கூறியுள்ளார்.