Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கணவனின் மதுபழக்கத்தால் 6 மாத கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம்….!

கணவர் மது அருந்துவதால் 6 மாத கர்ப்பிணிக்கு நேர்ந்த சோகம் கொலையா அல்லது தற்கொலையா என்று காவல்துறையினர் விசாரணை….

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வெங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட இரும்பேடு பகுதியில் உள்ள சத்திய மூர்த்தியின் மனைவி புவனா. 24 வயது உடைய இவருக்கு திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் ஆகின்றது.  இவர்களுக்கு ஒன்றரை வருட பெண் குழந்தை ஒன்று உள்ளது. மேலும் புவனா 6 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் சத்தியமூர்த்தி அடிக்கடி குடித்துவிட்டு புவனாவிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த புவனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றனர்.

புவனாவின் சடலத்தை இமசடங்குகள் செய்து எரிக்க முயற்சி செய்துள்ளன. இந்நிலையில் சோமங்கள காவல்நிலையத்திற்கு  ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர் புவனாவின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இது கொலையாஅல்லது தற்கொலையா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |