Categories
தேசிய செய்திகள்

முத்ரா திட்டத்தில் பெற்ற கடன்களுக்கு 2% வட்டி தள்ளுபடி வழங்கப்படும்: நிர்மலா சீதாராமன்!!

முத்ரா திட்டத்தில் பெற்ற கடன்களுக்கு உரிய காலத்தில் தவணை செலுத்தினால் 12 மாதங்களுக்கு 2% வட்டி தள்ளுபடி வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான 2ம் கட்ட அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை சீராக்க ஊக்குவிப்பு திட்டங்களை பிரதமர் அறிவித்திருந்தார். அதற்கான விளக்கத்தை நிதியமைச்சர் நேற்று விளக்கியிருந்தார்.

இந்த நிலையில் 2வது நாளாக தொகுப்பு திட்டம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது,” அதேபோல, முத்ரா – ஷிசு திட்டத்தில் சுமார் ரூ.1.62 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற்றவர்களுக்கு சுமார் 1500 கோடி ரூபாய் வரை நிவாரணம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், முத்ரா – ஷிசு திட்டத்தில் ஒருவர் அதிகபட்சமாக ரூ.50,000 வரை கடன் பெற முடியும் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த திட்டத்தில் கடன் பெற்றவர்களுக்கு ஏற்கனவே 3 மாதம் கடன் தவணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார். மேலும், ரூ.6 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெரும் நடுத்தர வீட்டு கடன் மானிய திட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |