9ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து சிபிஎஸ்இ விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கல்வி நிலையங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. பொதுத் தேர்வு மாணவர்களுக்கு தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது. மாணவர்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே அவர்களால் தேர்வு எழுத முடியாது, தேர்வு எழுதாமலே அவர்களை அடுத்த கல்வியாண்டு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது.
பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்த நிலையில் மத்திய மனிதவளத் துறை அமைச்சகமும் அதன் கீழ் உள்ள சிபிஎஸ்இயும், அதேபோல மாநில அரசாங்கங்களிடமும் இந்த கோரிக்கை எழுந்தபோது அந்த மாநில கல்வித் துறையும் தொடர்ந்து விளக்கம் அளித்து வந்தது.
இந்த நிலையில்தான் தற்போது சிபிஎஸ்இ புதிய விளக்கத்தை அளித்துள்ளது. 9ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு குறித்து புதிய விளக்கம் அளித்துள்ளது. 9ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பில் தோல்வியடையும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வு நடத்தப்படும். பள்ளிகளில் கணினி வழியாகவோ அல்லது நேரடியாகவோ தேர்வு நடத்திக்கொள்ளலாம். இறுதித்தேர்வின்றி ஏற்கனவே எழுதிய பள்ளி தேர்வு மார்க் அடிப்படையில் தேர்ச்சி என அறிவிக்கப்படும் என்று சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது. இது மாணவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.