தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 477 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,674ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 10 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 500க்கு கீழ் குறைந்துள்ளது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 363பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,625ஆக உயர்ந்துள்ளது. இன்று 253 ஆண்கள், 194 பெண்களும் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் 6,389 ஆண்கள், 3,282 பெண்கள் மற்றும் மூன்று திருநங்கைகள் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.